Home /News /tamil-nadu /

விரைவில் புரட்சி பயணம், சசிகலாவை சந்திக்க திட்டம் - ஓபிஎஸ் மாஸ்டர் பிளான்

விரைவில் புரட்சி பயணம், சசிகலாவை சந்திக்க திட்டம் - ஓபிஎஸ் மாஸ்டர் பிளான்

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

தமிழகம் முழுவதும் விரைவில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் சசிகலா, டிடிவி தினகரனை நேரில் சந்திக்க உள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ ஐயப்பன் அவரை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
    எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு ஏற்பட்ட அவமானங்களை தாங்கி கொண்டு அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என ஓ.பி.எஸ் கூறினார்.

    எனவே அவருக்கு ராமருக்கு பாலம் கட்ட அனில் உதவியது போல உறுதுணையாக இருப்பேன். என்னைப்போன்று மற்ற எம்.எல்.ஏக்களும் ஒபிஎஸ்-க்கு ஆதரவு அளிப்பார்கள் என்னைப்போன்று மற்ற எம்.எல்.ஏ-களும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றும் எம்எல்ஏ ஐயப்பன் தெரிவித்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் நிலைப்பாடு. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ஏற்கனவே சொல்லியுள்ளேன். பொதுக்குழு என்ற பெயரில் இபிஎஸ் தரப்பினர் நாடகம் நடத்தியுள்ளனர். எங்களுக்கு தொண்டர்களின் ஆதரவும், தமிழக மக்களின் ஆதரவும் முழுமையாக உள்ளது

    Also Read : நலம் பெற்று வருகிறேன்... மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா அறிக்கை

    இரு தரப்பையும் இணைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விரைவில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளேன். மேலும், பலர் என் பக்கம் வர உள்ளார்கள் அது யார் என்பது பரம ரகசியம். கட்சியின் நலன் கருதி சசிகலா,டிடிவி தினகரன் ஆகியோரை நேரில் சந்திப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    அதிமுகவில் தனது இடத்தை தக்கவைக்க ஓ.பன்னீர்செல்வம் அதிரடியான முடிவுகளை அறிவித்துள்ளதால் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் மேலும் சில ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் வர உள்ளதாக கட்சி நிர்வாகிகள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: ADMK, O Pannerselvam, Sasikala

    அடுத்த செய்தி