• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோயில் நகைகளை, தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம்.. பாஜக கடும் எதிர்ப்பு!

கோயில் நகைகளை, தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம்.. பாஜக கடும் எதிர்ப்பு!

கோயில் நகைகளை, தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம்.. பாஜக கடும் எதிர்ப்பு!

கோயில் நகைகளை, தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம்.. பாஜக கடும் எதிர்ப்பு!

தமிழக திருக்கோயில்களில் பக்தர்கள் தானமாகவும், காணிக்கையாகவும் அளித்த நகைகளை, தங்கக் கட்டிகளாக மாற்றி வருமானம் ஈட்ட இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

  • Share this:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 44,301 கோவில்கள் உள்ளன. அதில், அதிக வருவாய் ஈட்டக்கூடிய பெரிய கோவில்கள் எண்ணிக்கை சுமார் 50. முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 47 கோவில்களில் பக்தர்கள் வழங்கிய சிறிய நகைகள் தங்க கட்டிகளாக இத்திடத்தின் கீழ் மாற்றப்பட உள்ளன.

நகை கணக்கெடுப்பு பணிகளை கண்காணிக்க மதுரை மண்டலத்திற்கு நீதிபதி மாலா, திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவி சந்திரபாபு, சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜீ ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு கோவில்களில் இருந்து எடுக்கப்படும் நகைகள் மத்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள உருக்காலை நிறுவனத்தில் 24 கேரட் தங்க கட்டிகளாக உருக்கி மாற்றப்படும்.

அதனை வைப்பு நிதியில் வைத்து  வருமானம் ஈட்டப்பட உள்ளது. அதில் வரும் வட்டித்தொகையை கோயில் திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதுகுறித்து பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறுகையில், 'பக்தர் ஒரு கோயிலுக்கு காணிக்கையாக செலுத்துவது, அந்த கோயிலுக்கு மட்டும் தான் சொந்தமானது எனவும், கோயில் நகைகளை என்ன செய்வது என்று அந்த கோயில் தான் முடிவு செய்யவேண்டுமே தவிர, இது அறநிலையத்துறையின் பணி அல்ல, என்றார்.

"கோவில் நகைகளை உருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவ்வாறு உருக்குவது காணிக்கையாக கொடுத்தவர்களின் மனதை புண்படுத்துவதோடு ஊழலுக்கு வழிவகுக்கும்", என்கிறார் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத்.

இந்நிலையில், இத்திட்டம் கோயில்களின் வருமானத்தை அதிகரிக்கும் எனவும், பயன்பாட்டிற்கு இல்லாத, உடைந்த நகைகளை மட்டுமே உருக்க திட்டமிட்டுள்ளதாகவும், மன்னர்கள், ஜமீன்தார்கள், அறங்காவலர்கள் கொடுத்த நகைகளை உருக்க முயற்சிக்கவில்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

வெளிப்படைத் தன்மையுடன் நகைகளை கணக்கிடும் பணி நடப்பதாகவும், இப்பணிகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: