• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அம்மா உணவகத்தை மூட திட்டம்? - சென்னையில் ஊழியர்கள் போராட்டம்

அம்மா உணவகத்தை மூட திட்டம்? - சென்னையில் ஊழியர்கள் போராட்டம்

Amma Unavakam

Amma Unavakam

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்மா உணவக ஊழியர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Share this:
    அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுப்பி நீலாங்கரையில் அம்மா உணவக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை நீலாங்கரை அம்மா உணவக ஊழியர்கள் 25 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஊழியர்கள் 25 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள், என்ற விதத்தில், அதாவது ஒரு நாள் 12 பேரும் மற்றொரு நாள் 12 பேர் என்ற அடிப்படையில் பணிபுரியுமாறு மேலதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனால் பாதி சம்பளம் தான் கிடைக்கும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி தினந்தோறும் பணிசெய்யும் நடைமுறைக்கே கொண்டு வரக்கோரி உணவக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதம் செய்து வருகின்றனர்.

    Also read:  வங்கதேசத்தில் வெடித்த மதக் கலவரம்.. 4 பேர் பலி..

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்மா உணவக ஊழியர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சுயர்சி முறை மாற்றமானது அனைத்து அம்மா உணவகங்ளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மாதம் 4,500 ரூபாய் சம்பளத்தில் ஒரு குடும்பத்தை எவ்வாறு நடத்த முடியும் என்றும், பாதி சம்பளத்தில் யார் வேலை செய்வார்கள், இது அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் தெரிவிக்கப்படுள்ளது என்ற சந்தேகம் எழுப்புவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    ராபர்ட் - செய்தியாளர், சென்னை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: