Home /News /tamil-nadu /

பஜனை மடத்தில் இயங்கும் ரேஷன் கடை.. நிலம் ஒதுக்கி, நிதி ஒதுக்கிய பின்னரும் நின்று போன புதிய கடை கட்டும் திட்டம்...

பஜனை மடத்தில் இயங்கும் ரேஷன் கடை.. நிலம் ஒதுக்கி, நிதி ஒதுக்கிய பின்னரும் நின்று போன புதிய கடை கட்டும் திட்டம்...

20 ஆண்டுகளாக பஜனை மடத்தில் இயங்கும் நியாயவிலைக் கடை. பொதுமக்கள் பங்களிப்போடும்,  நிலம் ஒதுக்கி, நிதி ஒதுக்கிய பின்னரும் புதிய கடை கட்டும் திட்டம்  நின்று போனது.

20 ஆண்டுகளாக பஜனை மடத்தில் இயங்கும் நியாயவிலைக் கடை. பொதுமக்கள் பங்களிப்போடும்,  நிலம் ஒதுக்கி, நிதி ஒதுக்கிய பின்னரும் புதிய கடை கட்டும் திட்டம் நின்று போனது.

20 ஆண்டுகளாக பஜனை மடத்தில் இயங்கும் நியாயவிலைக் கடை. பொதுமக்கள் பங்களிப்போடும்,  நிலம் ஒதுக்கி, நிதி ஒதுக்கிய பின்னரும் புதிய கடை கட்டும் திட்டம் நின்று போனது.

புதிய நியாவிலை கட்டிடம் வேண்டி 20 ஆண்டுகளாக தொடரும் கோரிக்கைகளை ஏற்று, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ நிதி ஒதுக்கியதோடு, சட்டப் பேரவை கூட்டத்தொடரிலும் கேள்வி எழுப்பினார். ஆனாலும் கட்டிடம் கட்ட தடை  நீடித்து வருவது ஏன் என்பதை பார்க்கலாம்.

சேலம் மாநகராட்சி 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி அழகாபுரம். இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு செயல்பட்டு வந்த நியாயவிலைக் கடையில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கடந்த 2002 ஆம் ஆண்டு தென் அழகாபுரம் பகுதியை சார்ந்த மக்களுக்காக தனியாக நியாயவிலைக் கடை பிரிக்கப்பட்டது. அப்போது தற்காலிகமாக ஒரு பஜனை மடத்தில் வாடகைக்கு இயங்க தொடங்கியது.

சுமார் 1200 குடும்ப அட்டைதாரர்களுக்காக நியாய விலை கடையாக செயல்படும் அந்த பஜனை மடத்தில் கதவோ, ஜன்னலோ அமைக்கப்படாமல் இரும்பு கம்பிகளால் ஆன கிரில் மட்டுமே உள்ளது. இதனால் மழை காலங்களில் உள்ளே தண்ணீர் புகுவதாலும், எலி, பெருச்சாலி உள்ளிட்ட உயிரிணங்கள் உள்ளே சென்று உணவு பொருட்களை வீணடிப்பதாலும் தரமில்லாத உணவுப் பொருட்களை அப்பகுதி மக்கள் பெற்று வந்துள்ளனர். இதனால் புதிய நியாயவிலை கடை கட்டித்தர அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்தது.

2003 ஆம் ஆண்டு முதல் சம்மந்தப்பட்ட பல்வேறு அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்களை அளித்து வந்துள்ளனர். அப்போது கூட்டுறவுத் துறை நட்டத்தில் இயங்கி வருவதாகவும், புதிய கட்டிடம் கட்ட நிதி இல்லை எனவும், பொதுமக்களே கட்டிக்கொடுத்தால் அதில் இயங்க தயார் எனவும், கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதால், பொது மக்களின் பங்களிப்போடு தன்னிறைவுத் திட்டத்தில் புதிய நியாயவிலை கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அப்போது மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆதி திராவிடர் நல துறையால் நிலம் ஒதுக்கப்பட்டு, கூட்டுறவுத் துறையிடமுமம் அனுமதி பெற்று புதிய கட்டிடம் கட்டுவதற்கான திட்டம் 2005 ஆம் ஆண்டு டிசம்பரில் 1,80,000 ரூபாய் மதிப்பில் உருவானது. இதற்காக பொதுமக்களின் பங்களிப்பாக 40,200 ரூபாய் கொடுத்துள்ளனர்.

சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனை முறையை உடனடியாக தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பின்னர் மாநகராட்சி பொறியாளர்கள் புதிய கட்டுமான பணிகளை துவங்க வந்தபோது, அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கால தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான ஆர்டிஐ தகவலில், கட்டிட பணிக்கான எந்த வேலைகளும் நடைபெறாததால் அரசாங்கம் ஒதுக்கிய பணம் திரும்ப பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அப்பகுதியைச் சார்ந்த ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஒன்று கூடி மூத்த குடிமக்கள் சங்கம் என்ற சங்கத்தை உருவாக்கி, புதிய நியாயவிலை கட்டித் தருமாறு  மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ, அமைச்சர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்து மனுக்களை நேரிலும், அஞ்சல் மூலமாகவும் கொடுத்து வந்துள்ளனர்.

இது வரை நிதி கிடைக்காத நிலையில் தற்போது சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ இரா.அருள் (பா.ம.க) தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து,  05-04-2022 அன்று பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். திட்டத்தை விரைவாக துவங்க மாவட்ட ஆட்சியரிடமும் கடிதம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் கேள்வி எழுப்பினார். அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளிக்கும் போது, நிதியும் ஒதுக்கிவிட்டீர்கள், நிலமும் உள்ளது, எனவே விரைவில் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த இடத்தை தொடர்ந்து, தனது ஆக்கிரமிப்பில் வைத்திருப்பவர், காலி செய்யாததால் தான் 2005 ஆம் ஆண்டு அரசு ஒதுக்கிய பணம் திரும்ப பெறப்பட்டது. இதில் அரசியல் தலையீடு இருப்பதால் தான் 20 ஆண்டுகளாக எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் தற்போது கிடைத்துள்ள எம்.எல்.ஏ  நிதியாவது முறையாக பயன்பட வேண்டும்,  ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிட பணிகளை துவங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

நியாயவிலைக் கடை கட்டிடம் அவசியம் தான், அதே நேரத்தில் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே ஏதாவது ஒரு இடத்தில் நியாயவிலை கடை வேண்டும் என கேட்டால் தான் கிடைக்கும், சர்ச்சைக்குறிய இடத்திலேயே வேண்டும் என கேட்டால் இப்போதைக்கு நியாயவிலை கடை இங்கு வராது என்கின்றனர் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு தரப்பினர்.

தற்போது நிதி கிடைத்து விட்ட பின்னரும் கூட, மூத்த குடிமக்களின் 20 ஆண்டு கால போராட்டத்திற்கு விடுவு கிடைக்குமா என்பது கேள்விக் குறியே.
Published by:Esakki Raja
First published:

Tags: Ration Shop, Salem

அடுத்த செய்தி