TN Budget 2021 | தமிழக பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்ப்பது இதைத்தான்!

விவசாயிகள்

வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்க வேண்டும் என்று வாழை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Share this:
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது பல்வேறு எதிர்பார்ப்புகளை பகிர்ந்துள்ளனர்.

அந்த வகையில் நீர்நிலை பாதுகாப்புக்கு வரும் பட்ஜெட்டில் அதிக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நீரின்றி அமையாது உலகு என்ற வகையில் நீராதாரங்களை மீட்டெடுத்தால்தான் விவசாயத்தை பாதுகாக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

Also Read: பட்ஜெட்டில் தனியார் பள்ளிகள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு என்ன?

மத்திய. மாநில அரசு வேளாண் பண்ணைகளில் விளைபொருட்களுக்கு ஆகும் உற்பத்தி செலவுகளை கணக்கிட்டு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட வேளாண் குழுக்களின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Also Read: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு!

மூன்று ஊராட்சிகளுக்கு ஒரு நெல்முதல் கொள்முதல் நிலையம் அமைக்கவும் கோரிக்கை வைத்துள்னர்.

வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்க வேண்டும் என்று வாழை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் பல்வேறு எதிர்பாப்புகளுடன் வேளாண் பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் விவசாயிகள்.
Published by:Arun
First published: