காங்கிரஸில் தொடங்கி மக்கள் நீதி மய்யம்... பழ.கருப்பையாவின் அரசியல் பயணம்

காங்கிரஸில் தொடங்கி மக்கள் நீதி மய்யம்... பழ.கருப்பையாவின் அரசியல் பயணம்

கமல்ஹாசன், பழ. கருப்பையா

காங்கிரஸ் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கிய பழ.கருப்பையா தற்போது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் பல்வேறு கட்சிகளில் அங்கம் வகித்த, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். அவரது அரசியல் பயணம் எத்தகைய மாறுதல்களைக் கொண்டுள்ளது என்று பார்ப்போம்.

  பட்டிமன்ற பேச்சாளர்...எழுத்தாளர்...நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் பழ.கருப்பையா... காமராஜரால் ஈர்க்கப்பட்ட அவர், காங்கிரசில் தன்னை இணைந்துக்கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கினார். 1969ம் ஆண்டு காங்கிரஸில் பிளவு ஏற்பட்ட போது, காமராஜருடனே இருந்தார்.

  காமராஜரின் மறைவுக்கு பின், ஜனதா கட்சியிலும், அக்கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கு பிறகு ஜனதா தளம் கட்சியிலும் பயணித்தார். பின்னர், அக்கட்சியில் இருந்து விலகி 1988ம் ஆண்டு, தி.மு.கவில் இணைந்தார். அங்கு சில காலம் பயணித்த அவர், வைகோ தலைமையிலான ம.தி.மு.கவில் ஐக்கியமானார்.

  2010ம் ஆண்டு அ.தி.மு.கவுக்கு சென்ற பழ.கருப்பையாவுக்கு அக்கட்சியின் இலக்கிய அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். அ.தி.மு.கவில் இருந்து கொண்டே அரசை விமர்சித்ததால், 2016ம் ஆண்டு பழ.கருப்பையாவை கட்சியில் இருந்து நீக்கினார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா.

  அரசியல் பயணத்துக்கு மத்தியில், நடிகராக புது அவதாரம் எடுத்தார். 2010ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு திரைப்படத்தில், தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

  மீண்டும் அரசியல் பயணத்தை தொடர்ந்த அவர் 2016ம் ஆண்டு கருணாநிதி முன்னிலையில் தி.மு.கவில் சேர்ந்தார். 2019ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகிய அவர், தி.மு.க கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுவதாக சாடினார். இதற்கு மத்தியில், 2018ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார்.

  பல அரசியல் கட்சிகளில் அங்கம் வகித்த பழ.கருப்பையா, தற்போது, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் சங்கமித்துள்ளார். அவரை வரவேற்கும் விதமாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் பழ.கருப்பையா போட்டியிடுவார் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளில் பணியாற்றியுள்ள பழ.கருப்பையா.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: