புயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர் ஆய்வு - மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும் அமைச்சர்கள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

Cyclone Gja | 4 நாட்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் என ஆய்வுப்பணியின் போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆய்வுப்பணிகளை தொடங்கினார். நாகை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களை அவர் பார்வையிட்டுள்ளார். 

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பார்வையிட்டார். இதற்காக, சென்னையிலிருந்து ரயில் மூலம் நாகை சென்ற அவர், பாதிக்கப்பட்ட இடங்களில் காலை 10 மணி அளவில் ஆய்வைத் தொடங்கினார்.

நாகையில் இருந்து வேதாரண்யம் வரை 60 கிலோ மீட்டர் தூரம் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அதன்பின் பழங்கில்லிமேடு, தோப்புத்துறை, வெள்ளப்பள்ளம், மகாராஜபுரம் உள்ளிட்ட 20 இடங்களைப் பார்வையிட்டார்.

புயலால் மரங்கள் விழுந்த இடங்களைப் பார்வையிட்ட ஆளுநர் பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர்.

Gaja cyclone, கஜா புயல்
புயலால் பாதிக்கப்பட்ட பகுதி


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர்,  4 நாட்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் என தெரிவித்தார்.

மீட்புப் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு துரிதப்படுத்த ஆலோசனை வழங்கியுள்ள தமிழக அரசு

புதுக்கோட்டை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை அலுவலக வளாகத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் தொற்றுநோய் தடுப்பு மீட்புக் குழு பணியினையும் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் பணியையும் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கிவைத்தார்.

நாகை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 மணி நேரமும் உணவு கிடைப்பதற்கு ஏதுவாக தமிழக அரசால் நாகையில் 4 இடங்களில் சமுதாய சமையலறை திறக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, லெக்கனாம்பேட்டை, சுந்தரகோட்டை உள்ளிட்ட இடங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது குடிநீர் கேட்டு பொதுமக்கள் அவர்களை முற்றுகையிட்டனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும் அமைச்சர்களை துரத்தினால் மக்களுக்கு நிவாரண உதவி எப்படி கிடைக்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். கஜா புயல் பாதிப்புகள் குறித்து அதிகமாகக் கூறினால்தான் மத்திய அரசிடமிருந்து நிதி பெற முடியும் என்றார்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தம்பிதுரை கேட்டுக்கொண்டார்.

Also see... காலத்தின் குரல் - 21-11-2018
Published by:Vaijayanthi S
First published: