தமிழகம் முழுவதும் திமுக கருப்புக்கொடி போராட்டம்

திமுக நிர்வாகிகள் போராட்டம்

மின் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாகக் கூறி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கறுப்பு சட்டை அணிந்து பங்கேற்றார். மின் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்த அவர், வீட்டு வாசலில் உள்ள கொடிக் கம்பத்தில் கறுப்பு கொடியை ஏற்றி வைத்தார்.

  கண்டன முழக்கங்களை எழுப்பிய மு.க.ஸ்டாலின், மின் கட்டணம் கணக்கிடுவதில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  அண்ணா அறிவாலயம் முன்பு திமுக எம்பி தயாநிதிமாறன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், வீட்டு மின் நுகர்வோருக்கு சலுகையாக 4 மாத மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

  சென்னை நங்கநல்லூரில் உள்ள தனது இல்லம் முன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கறுப்பு கொடியேந்தி, அதிக மின் கட்டண வசூலைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்.

  சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லம் முன் மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய கனிமொழி, மின் கட்டண விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என குறிப்பிட்டார்.

  தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அதிக மின் கட்டண வசூலை ரத்து செய்ய வலியுறுத்தி கறுப்பு கொடியேந்தி முழக்கங்களை எழுப்பினர்.  திருவாரூரில் மின் வாரிய அலுவலகம் முன்பு திமுகவினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உட்பட நூற்றுக்கணக்கானோர் முகக் கவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று மின் கட்டணத்தில் சலுகை வழங்க வலியுறுத்தினர்.

  திமுக நிர்வாகிகள் போராட்டம்


  செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா சூனாம்பேடு பகுதியில்

  இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக சார்பில் போராட்டம் நடந்தது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் சிகாமணி, கட்சியினர் மோகன் ராஜ், அசோக் குமார், ஜீவரத்தினம் முகுந்தன், பார்த்தி, தமிழ்ச்செல்வன், சதீஷ்குமார்,சேட்டு கோசல், உதயசங்கர், சுமன் கார்த்திக் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

  தமிழகம் முழுவதும் இதேபோல பல இடங்களில் கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
  Published by:Sankar A
  First published: