• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாடி தோற்ற இளைஞர் மனமுடைந்து தற்கொலை

ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாடி தோற்ற இளைஞர் மனமுடைந்து தற்கொலை

Youtube Video

விருதுநகர் அருகே ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட இளைஞர், பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

  • Share this:
    சென்னையில் ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாடி தோற்றதால் மனமுடைந்து கல்லூரி மாணவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். தற்போது அதே போன்று ஒரு இளைஞர் விருதுநகரில் தற்கொலை செய்து கொண்டார்.

    விருதுநகர் சூலக்கரை வீரப்பெருமாள் தெருவைச் சேர்ந்த மகாராஜா என்பவரது மகன் 24 வயதான பேச்சிமுத்து. அரசு தேர்வுக்கு இவர் தயாராகி வந்தார். தன்னார்வ அமைப்பு ஒன்றில் 2 வருடமாக தன்னார்வலராகவும் இருந்து வந்தார்.

    கடந்த 2 நாட்களாக காணவில்லை என பெற்றோர் சூலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தேடிவந்த நிலையில், விருதுநகர் அருகே மாத்தனாயக்கன்பட்டியில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத இளைஞர் உடல் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.

    போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், 2 நாட்களுக்கு முன் காணாமல் போன இளைஞர் பேச்சிமுத்து என தெரியவந்தது. இளைஞரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

    Also read: புதுவை: அரசு மருத்துவமனை பிணவறையிலிருந்து காணாமல் போன பெண்ணின் உடல்

    போலீசார் விசாரணையில் பேச்சுமுத்து கடந்த 6 மாத காலமாக சர்வோ டெக்ஸ் என்ற பிசினஸ் ஆப்பில் பணம் போடுவதும் எடுப்பதுமாக இருந்துள்ளார். சம்பளப் பணம் முழுவதையும் அதிலேயே போட்டுள்ளார். சில நேரம் லாபம் கிடைத்தாலும் பல நேரம் நஷ்டத்தையே சந்தித்துள்ளார்.

    கடந்த 2 நாட்களூக்கு முன்பு பேச்சிமுத்து சோர்வாக இருந்துள்ளார். இது குறித்து சகோதரர் சுப்பிரமணி கேட்டபோது, தான் ஆன்லைன் பிசினசில் 11,000 ரூபாய் இழந்துவிட்டதாகவும், இதற்கு முன்பு பல்லாயிரகணக்கில் இழந்துள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    இதனைக் கேட்ட பெற்றோர் மற்றும் சகோதாரர் சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து விரக்தியில் வெளியில் சென்றவர் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பேச்சுமுத்துவின் தற்கொலைக்கு ஆன்லைன் தொழில் நட்டம் மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: