அ.தி.மு.க அரசின் லஞ்சம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது! காக்னிசென்ட் விவகாரத்தில் ஸ்டாலின் காட்டம்

அமெரிக்காவின் சட்ட விதிகளை மீறி, வெளிநாட்டில் லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக, காக்னிசன்ட் நிறுவனத்திற்கு 180 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Web Desk | news18
Updated: September 16, 2019, 10:31 PM IST
அ.தி.மு.க அரசின் லஞ்சம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது! காக்னிசென்ட் விவகாரத்தில் ஸ்டாலின் காட்டம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Web Desk | news18
Updated: September 16, 2019, 10:31 PM IST
காக்னிசன்ட் நிறுவனம் சென்னையில் புதிய கட்டட அனுமதிக்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரிப்பதாக மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் காக்னிசண்ட் நிறுவனம், இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை அலுவலகங்கள் சென்னையில் சிறுசேரி, சோழிங்கநல்லூர், சானடோரியம் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வருகின்றன.

2011-ம் ஆண்டு சோழிங்கநல்லூரில் 17 ஆயிரத்து 500 பணியாளர்கள் வேலை செய்யக்கூடிய வகையில், கே.ஐ.டி.எஸ். வளாகத்தில் 27 லட்சம் சதுர அடியில் புதிய கட்டடம் கட்டும் பணியை பிரபல கட்டுமான நிறுவனத்திடம் காக்னிசன்ட் நிறுவனம் ஒப்படைத்துள்ளது. இந்த கட்டடத்துக்கு அனைத்து விதமான அனுமதியையும் பெற அரசு அதிகாரிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டில் காக்னிசண்ட் நிறுவனம் 26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்திருப்பது அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பு விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து, அமெரிக்காவின் சட்ட விதிகளை மீறி, வெளிநாட்டில் லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக, காக்னிசன்ட் நிறுவனத்திற்கு 180 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை அந்த நிறுவனம் செலுத்திவிட்ட நிலையில், லஞ்சம் கொடுக்கப்பட்ட காலத்தில் காக்னிசன்ட் நிறுவனத்தின் சி.ஓ.ஓ. வாக இருந்த ஸ்ரீதர் திருவேங்கடத்திற்கும், 36 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை செலுத்த அவர் ஒப்புக் கொண்டுவிட்ட நிலையில், இந்த லஞ்ச விவகாரத்தை, மத்திய புலனாய்வு அமைப்புகளும் கையில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரிப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். லஞ்சம் கொடுத்தவர்களுக்கு அமெரிக்கா தண்டனை கொடுத்திருக்கும் நிலையில், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர். கூட போடாமல், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பாதுகாப்பதாக மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.


அதுமட்டுமல்ல மத்திய அரசும், சிபிஐயும் கண்டும் காணாமல் இதை ஊக்குவிக்கின்றனவா? என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also see:First published: September 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...