• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CAA எதிர்ப்பு பேரணியை தடுக்க போர் நினைவிடத்தில் முள்வேலி தடுப்புகள்!

CAA எதிர்ப்பு பேரணியை தடுக்க போர் நினைவிடத்தில் முள்வேலி தடுப்புகள்!

கோப்பு படம்

கோப்பு படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெறும் பேரணியை தடுக்க போர் நினைவிடத்தில் முள்வேலி தடுப்புகள் போடப்பட்டிருந்தது.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், சட்டமன்றத்தில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை வாலாஜா சாலையில் தொடங்கி சட்டப்பேரவை நோக்கி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேரணி நடத்தினர்.

சட்டபேரவையை முற்றுகையிடும் நோக்கில் தடையை மீறி பேரணி நடைபெற்றதால் போர் நினைவிடம் அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தடையை மீறி போரட்டக்காரர்கள் பேரவையை நோக்கி நகரும் பட்சத்தில் அவர்களை தடுக்க முள்வேலிகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்த பிறகுதான் அனுமதிக்கப்பட்டன.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: