சென்னையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில்
அதிமுக கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அக்கட்சி தொண்டரிடம் திருட முயன்ற திருடனை கட்சியினர் கையும் களவுமாக பிடித்து போலீஸிஸ் ஒப்படைத்தனர்.
அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 23-6-2022 அன்று நடைபெற உள்ள கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும், என்னென்ன தீர்மானங்களைக் கொண்டுவரலாம் என்பது குறித்தும் விரிவாக ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த கூட்டததிற்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வந்தனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கூட்டம் அங்கே அதிக அளவில் காணப்பட்டது. செல்போன்களை எடுத்து வரக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
Must Read : மதுபோதையில் தகராறு... பாலியல் தொல்லை - கணவன் முகத்தில் கொதிக்கும் ரசத்தை ஊற்றிய மனைவி
இந்நிலையில், கூட்டத்தில் நுழைந்த பிக்பாக்கெட் திருடன் ஒருவன் அதிமுக தொண்டர் ஒருவருடம் திருட முற்றான் அப்போது, அவனை தொண்டர்கள் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அந்த திருடனை அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால், அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.