முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்களுக்கு நேரடி மானியம்

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்களுக்கு நேரடி மானியம்

மாற்றுத் திறனாளிகள்

மாற்றுத் திறனாளிகள்

Physically challenged : உதவி உபகரணத்தின் விலையை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் கூடுதல் விலையை மட்டும் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரால் பரிந்துரைக்கப்படும் வழிமுறையில் குறிப்பிடப்படும் கால அளவிற்குள் பயனாளிகளால் செலுத்தப்பட வேண்டும்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மாற்றுத் திறனாளிகள் தங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியில், தேர்வினை வழங்கும் வகையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 5 உதவி உபகரணங்கள் வழங்க ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தகுதி வாய்ந்த நபர்களுக்கு அவர்கள் பயன்படுத்த விரும்பும் சாதனங்களின் வகை மற்றும் மாதிரியில் தெரிவினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தினை அரசு செயல்படுத்தும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், தகுதிவாய்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியில், தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டம் 2021-22ம் ஆண்டு முதல், முதற்கட்டமாக 5 வகை உதவி உபகரணங்களான மூன்று சக்கர மிதிவண்டி, சக்கர நாற்காலி, காதுக்கு பின்புறம் அணியும் காதொலிக் கருவி, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் மற்றும் பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் ஆகியவற்றைப் பொருத்து செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயனாளிகள் பெற தேர்வு செய்யும் உபகரணத்தின் விலையானது அரசால் வழக்கமாக வழங்கப்படும் உதவி உபகரணத்தின் விலையை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் கூடுதல் விலையை மட்டும் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரால் பரிந்துரைக்கப்படும் வழிமுறையில் குறிப்பிடப்படும் கால அளவிற்குள் பயனாளிகளால் செலுத்தப்பட வேண்டும் எனவும், அதன் பின்பே உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Must Read : பொங்கலுக்கு பின் முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மேலும், இத்திட்டத்திற்கான செலவினம் வருடாந்திர வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் மேற்கொள்ளவும், வழக்கமாக வழங்கப்படும் உதவி உபகரணங்கள் விலையை நிர்ணயம் செய்திட தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் மற்றும் விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More : வீடுகளுக்கே சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி - சென்னை மாநகராட்சி அசத்தல் திட்டம்

First published:

Tags: Physically challenged, TN Govt