Home /News /tamil-nadu /

சர்வதேச செஸ் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தின் மாற்றுத்திறனாளி வீரர்!

சர்வதேச செஸ் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தின் மாற்றுத்திறனாளி வீரர்!

தமிழ்க அரசு வெற்றிக்குப் பின் வீரர்களை கொண்டாடுவதை விட்டுவிட்டு, அதற்கு முன்பே உரிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்க அரசு வெற்றிக்குப் பின் வீரர்களை கொண்டாடுவதை விட்டுவிட்டு, அதற்கு முன்பே உரிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்க அரசு வெற்றிக்குப் பின் வீரர்களை கொண்டாடுவதை விட்டுவிட்டு, அதற்கு முன்பே உரிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
ஐரோப்பாவில் நடைபெறவுள்ள சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் தேர்வாகியுள்ளார். சாதிக்கும் முனைப்பில் உள்ள அவருக்கு பொருளாதாரம் தடையாக உள்ளதால், அரசு உதவி புரிய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் அண்மைக் காலமாக தடம் பதித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, வருகின்ற ஜூன் 27-ம் தேதி ஸ்லோவாகியாவில் தொடங்கும் சர்வதேச செஸ் தொடரில், இந்தியாவின் சார்பில் 5 பேர் பங்கேற்கவுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் அருகே உள்ள லெட்சுமி எஸ்டேட் பகுதியை சேர்ந்த அடைக்கலவன் என்பவரின் மகன் அங்கப்பன் ஒரு மாற்றுத்திறனாளி. இவர், திருச்சியில் நடைபெற்ற செஸ் போட்டியில், வீல்சேர் பிரிவில் 3-ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றுள்ளார்.

இதன் மூலம், ஸ்லோவாகியா போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மற்றொரு பிரிவில் திருச்சியைச் சேர்ந்த ஜெனிதா என்பவரும் தகுதி பெற்றுள்ளார். இவர் முதலிடம் பிடித்ததால், அரசின் நிதியுதவியுடன் ஸ்லோவாகியா செல்கிறார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த அங்கப்பன், மாநில, தேசிய அளவில் பல்வேறு பதக்கங்கள் வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆனால், வெளிநாடு செல்லும் அளவிற்கு போதிய வசதி இல்லாததால் சர்வதேச பட்டம் வெல்லும் கனவு நிறைவேறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

மாற்றுத்திறனாளி அங்கப்பன்.


மாற்றுத்திறனாளியான அங்கப்பனை அழைத்துச் செல்ல கூடுதல் செலவு ஆகும் என்பதால் விளையாட்டு துறை பின்வாங்குவதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

வெற்றிக்குப் பின் வீரர்களை கொண்டாடுவதை விட்டுவிட்டு, அதற்கு முன்பே உரிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் தங்களது சொந்த முயற்சியில், பல்வேறு போராட்டங்களுக்குப் பின் வெற்றி பெறுகின்றனர். ஆனால், அதற்கு பின்னர்தான் அரசு அவர்கள் மீது கவனம் செலுத்துவதாகவும் விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Also see... மைதான வசதி இல்லாமலேயே கால்பந்தாட்டத்தில் சாதிக்கும் குமரி வீரர்கள்!

Also see... 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: Pudukottai, Sports

அடுத்த செய்தி