Home /News /tamil-nadu /

படிக்க வைத்துவிட்டால் நாங்கள் பார்த்துக்கொள்வோம்.. மாற்றுத்திறனாளி பெண்ணின் குழந்தைகள் கோரிக்கை..!

படிக்க வைத்துவிட்டால் நாங்கள் பார்த்துக்கொள்வோம்.. மாற்றுத்திறனாளி பெண்ணின் குழந்தைகள் கோரிக்கை..!

குடிபோதை ஆசாமியால் நிகழ்ந்த விபத்தில் மற்றொரு காலும் பாதிக்கப்பட, ராஜாமணி நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், 2 குழந்தைகள், வயதான தாய், தந்தையுடன் அன்றாட உணவுக்கே அல்லல்பட்டு வருகிறார்.

ஆலங்குடி அருகே உள்ள கும்மங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி. ஒரு கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. இவரின், கணவர் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், தையல் கடையில் வேலை பார்த்து 2 குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார். ஓராண்டுக்கு முன் குடிபோதை ஆசாமியால் நிகழ்ந்த விபத்தில் மற்றொரு காலும் பாதிக்கப்பட, ராஜாமணி நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இவரின் தந்தையும், தாயும், விவசாயக்கூலி வேலைக்கு சென்று கொண்டு வந்த வருமானத்தில்தான் ராஜாமணியின் மருத்துவச்செலவும், குடும்பமும் ஓடியுள்ளது. கொரோனா ஊரடங்கால் இப்போது இவர்களும் வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு, ஒரு வேளை சாப்பாட்டுக்குகூட திண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து ராஜாமணி கூறுகையில், ''எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும். ஒரு காலையும் வைத்துக் கொண்டு சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தினசரி தையல் வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்தேன் ஆனால் அந்த ஒருக்காலும் விபத்தில் பாதிக்கப்பட்டு தற்போது எழுந்து நிற்கவே முடியாத சூழலில் தவித்து வருகிறேன். மருத்துவ செலவுக்கும் பிள்ளைகளை வளர்ப்பதற்கும் பணமில்லாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்துவரும் எங்களுக்கு எனது அம்மா, அப்பா குறித்த இருவரும் கூலி வேலை செய்து கடந்த ஓராண்டாகஉணவு அளித்து வருகின்றனர். ஆனால் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அவர்களுக்கும் வேலை இல்லாத நிலையில் அடுத்த வேளை உணவுக்கே சிரமப்பட்டு வருகிறோம். தினசரி எனக்குள்ள மருத்துவ செலவும் அவர்களால் செய்ய முடியாமல் பிள்ளைகளையும் வளர்க்க முடியாமல் வயதான எனது அம்மா அப்பா தவித்து வருகின்றனர். எங்கள் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசும் தன்னார்வலர்களும் அவர்களால் முடிந்த உதவியை எங்களுக்கு செய்ய வேண்டும்'' என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து ராஜாமணியின் 11 வயது மகள் பிரசன்னா தேவி கூறுகையில், ''எனது அப்பா எங்களை பிரிந்து சென்ற நிலையில் எங்கள் அம்மா தான் வேலைக்கு சென்று எங்களை வளர்த்து வந்தார். தாத்தா பாட்டி தினசரி கூலி வேலைக்குச் சென்று எங்களுக்கு உணவளித்து வந்த நிலையில் தற்போது உள்ள கொரோனா ஊரடங்கு தினசரி அம்மா மருத்துவ செலவிற்கும் சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். அம்மாவிற்கு மருத்துவ செலவு செய்து எங்களை எப்படியாவது படிக்க வைத்து விட்டால் எங்கள் குடும்பத்தை நாங்கள் பார்த்துக்கொள்வோம்“ என்றார்.













சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vijay R
First published:

Tags: Lockdown, Pudukkottai

அடுத்த செய்தி