• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 6-ஆம் கட்ட அகழாய்வு பணிகள்: கொந்தகையில் முழு உருவ மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு..

6-ஆம் கட்ட அகழாய்வு பணிகள்: கொந்தகையில் முழு உருவ மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு..

கொந்தகையில் மனித முழு எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு

கொந்தகையில் மனித முழு எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு

கொந்தகை அகழாய்வில் நேற்று மாலை 51/2அடி அளவில் முழு மனித எலும்புகள் கண்டுபிடிக்கபட்டன.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. நான்கு இடங்களில் நடைபெறும் இந்த அகழாய்வில் கொந்தகையில் நேற்று மாலை முழு மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒன்று 51/2அடி  அளவில் உள்ளது.

இதனை  மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் இந்த முழு எலும்பு கூடுகளை ஆய்வு செய்து எடுத்தனர். ஏற்கனவே போன மாதம் 13ஆம் தேதி ஒரு எலும்பு கூடும்,7-ஆம் தேதி குழந்தையின் முழு எலும்புகூடும், ஜூன் 19-ஆம் தேதி ஒரு எழும்பு கூடும் கிடைக்கபெற்றன.

இதுவரை  5 முழு உருவ குழந்தை எலும்பு கூடுகள் கண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிக்கள் கிடைக்க பெற்றறன அதில் இருந்து மனித எலும்புகள் கிடைக்கபெற்று ஆய்வுக்கு அனுப்பிய  நிலையில் மற்றொரு குழியில் தொடர்ச்சியாக குழந்தைகளின் எலும்புகள் கிடைக்கப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...நீதி தேவைப்படுபவர்களின் பக்கம் நின்று போராடுபவர் அவர்” - கமலா ஹாரிஸ் தேர்வுக்கு ஒபாமா பாராட்டு..

இந்த எலும்புகளை ஆய்வு செய்த பின்னர் எந்த ஆண்டில் வாழ்ந்தவை ,எலும்புகளின் பாலினம், வாழ்க்கை முறைகள் ஆகியவை தெரியவரும் என தொல்லியல் துறை துணை இயக்குனர்  சிவானந்தம்  தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: