பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பாப்புலர் ஃப்ரண்ட் அப் இந்தியா அமைப்பு (Popular front of india) தடை செய்யப்படலாம் என்றும் அதனால் பாஜக தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த சுபைர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மேலமுரியில் ஆர்எஸ்எஸ் முன்னாள் பிரமுகர் சீனிவாசன் என்பவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. அடுத்தடுத்த நிகழ்ந்த இந்த கொலையால் கேரளாவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
அதில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று இந்தியாவில் சில இடங்களில் இரண்டு, மூன்று ஆண்டுகளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்தப்படுமா: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
தொலைக்காட்சிகளிலும் பி.ஃப்.ஐ அமைப்பை மத்திய அரசு தடை செய்ய உள்ளதாக செய்திகள் வருகிறது. ஒருவேளை பி.ஃப்.ஐ தடை செய்யப்பட்டால், பாஜக தொண்டர்கள், தலைவர்கள் ஆகியோர் 2, 3 மாதங்களுக்கு உங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள். தடை செய்யப்பட்டால் பி.ஃப்.ஐ அமைப்பிடம் இருந்து எதிர்ப்பு வெளிப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, கோவை, கன்னியாகுமரி, வேலூர் போன்ற பகுதிகளில் தீவிரமாக இந்துத்துவ பேசும் நபர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியாக பயணம் செய்யாதீர்கள். மண்டல தலைவர்கள் தங்களின் கீழே உள்ள காரியகர்த்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஒரு உயிர் கூட போகக்கூடாது.
மேலும் படிக்க: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை தென்கலை சர்ச்சை.. இருதரப்பினர் இடையே கைகலப்பு
எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாஜகவும் மத்திய உள்துறை அமைச்சகமும் எடுத்து வருகிறது. பி.ஃப்.ஐ தடை செய்யப்படாமலும் போகலாம். எனினும் நாம் முன்னச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று பேசியுள்ளார்.
Annamalai Audio:
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆடியோ தொடர்பாக பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு டிஜிபியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளது. அதில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்படும் எனவும், இதனால் பாஜகவைச் சேர்ந்தவர்களுக்கு அச்சுறுத்தல் என ஆடியோ வெளியிட்டிருந்தார். தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.