ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

PFI தடை எதிரொலி : பதற்றத்தை தனிக்க சென்னை முழுவதும் 4 ஆயிரம் போலீசார் குவிப்பு!..

PFI தடை எதிரொலி : பதற்றத்தை தனிக்க சென்னை முழுவதும் 4 ஆயிரம் போலீசார் குவிப்பு!..

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை  விதித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 4ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 22ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய 90க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வுத் முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் 200 க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த சோதனையானது நேற்றும் 8 மாநிலங்களில் நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் இன்று காலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை  அமைப்புகளை ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

Also Read: PFI தடையை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம் - கோவையில் பரபரப்பு

சென்னையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த அலுவலகத்திற்கு முன்பாக இரும்பு தடுப்புகள் போடப்பட்டு அந்த அலுவலகம் சார்ந்த அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்  ஜுவால் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநகர் முழுவதும் போலீசார் உச்சகட்ட உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனைதொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் அன்சாரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெயரில் செயல்பட்டு வந்த அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், சட்ட விரோதமாக ஜனநாயக விரோதமாக செய்யப்பட்டுள்ள தடையை நீதிமன்றத்தில் சட்டமூலமாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்திருந்தார்.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பிற்கு ஆதரவாக யாரும் பேசினாலும் பிரச்சாரம் செய்தாலும் கருத்துக்கள் தெரிவித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Published by:Arunkumar A
First published:

Tags: Chennai, Tamilnadu police