பைக் வைத்திருப்பவர்கள் உஷார்.. கையில் கேனுடன் சுற்றும் பெட்ரோல் திருடர்கள் - ஷாக் கொடுக்கும் சிசிடிவி காட்சிகள்

பெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சிகள்

இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடும் சம்பவம் அதிகரித்துள்ளன.

 • Share this:
  சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்  பைக்களில் பெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

  கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100-ஐ கடந்து விற்பனையாகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியுள்ளது. தமிழக அரசும் தளர்வுகளை அறிவித்துள்ளது. தமிழகம் படிப்படியாக தனது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பொதுபோக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் பணிக்கு செல்பவர்கள் கொரோனா அச்சம் மற்றும் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு தங்களது சொந்த வாகனங்களில் பயணம் மேற்கொள்கிறார்கள். குடும்பத்தினரும் அதையே விரும்புகின்றனர்.

  சாமாணியர்கள் மிகுந்த பொருளாதார சிரமங்களுக்கிடையே பெட்ரோல் போட்டு பணிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் திருட்டு சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சென்னையில் பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் அரங்கேற தொடங்கியுள்ளன. சென்னை அம்பத்தூர் பகுதியில் கடந்த சில நாள்களாக இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடும் சம்பவம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்தசம்பவங்கள் அதிகரித்துள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கைகளில் தண்ணீர் கேன்களுடன் சுற்றும் இளைஞர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடுகின்றனர். காவல்துறையினர் ரோந்து பணிகளில் சரிவர ஈடுபடாததே இந்த திருட்டுகளுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒரு லிட்டர் பெட்ரோலுக்காக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பதா என பொதுமக்கள் தயக்கம் காட்டுவதும் பெட்ரோல் திருடர்களுக்கு சாதமாக அமைந்து விடுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: