தமிழக அரசு அறிவித்துள்ள பெட்ரோல் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அறிவிப்பு வெளியிட்டார். மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்து, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காமல் பெருமளவில் பயன் பெற்றதால் பெட்ரோல் விலை உயர்விற்கு மத்திய அரசுதான் காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், எங்கெங்கு தேவையோ அங்கு கூடுதல் நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வருவாயை கூட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000: ரேஷன் அட்டையில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை - நிதியமைச்சர்
தொடர்ந்து பேசிய அவர், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்படும் வகையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் உயர்தட்டு வாகனங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் அதன் மீதான வரி குறைக்கப்படவில்லை என்று கூறியதோடு, பெட்ரோல் மீதான வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
3 ரூபாய் வரி குறைக்கப்பட்டதால் தமிழகத்தில் விலை 100 ரூபாய்க்கு கீழ் வரவுள்ளது.
மேலும் படிக்க: குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் இவர்களுக்கு இல்லை- நிதியமைச்சர் திட்டவட்டம்!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.