Home /News /tamil-nadu /

Petrol Price Hike Protest : உச்சத்தைத் தொட்ட பெட்ரோல், டீசல் விலை... பாடை கட்டி, ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி

Petrol Price Hike Protest : உச்சத்தைத் தொட்ட பெட்ரோல், டீசல் விலை... பாடை கட்டி, ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி

நூதன ஆர்ப்பாட்டத்தில் குதித்த காங்கிரஸ் கட்சி

நூதன ஆர்ப்பாட்டத்தில் குதித்த காங்கிரஸ் கட்சி

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, இன்று தமிழகத்தின் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று சென்னையில் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து 97 ரூபாய்19 காசுகளுக்கும், டீசல் விலை 27 காசுகள் உயர்ந்து, 91 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்குகிறது.

    கடலூரில் இன்று பெட்ரோல் விலை 26 பைசா, டீசல் விலை 27 பைசா உயர்ந்துள்ளது. இதனால் கடலூர் நகர பகுதியில் பெட்ரோல் 99 ரூபாய் 13 காசுகளுக்கும், டீசல் 93 ரூபாய் 28 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. குமராட்சி பகுதியில் பெட்ரோல் 99 ரூபாய் 52 காசுகளுக்கும், டீசல் 93 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.கடலூரில் மே மாதம் முதல் தற்போது வரை 22 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் 4 ரூபாய் 77 காசும், டீசல் 5 ரூபாய் 67 காசும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, இன்று தமிழகத்தின் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு தழுவிய அளவில் இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்திருந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஒருசில இடங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.

    ALSO READ |  வங்கிக்கடன் தவணை திரும்பி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்

    இந்நிலையில் 11ம் தேதி (இன்று) பெட்ரோல் பங்க்குகள் முன் திரண்டு அடையாள போராட்டத்தில் ஈடுபடுமாறு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது.அதன் படி தமிழகத்தின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தென்காசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இரு சக்கர வாகனத்தை பாடை கட்டி மத்திய அரசை கண்டித்து நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா நோய்தொற்று பரவல் அதிகமாக இருந்த போதிலும் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில் போக்குவரத்துக்கு முக்கிய மூல பொருளாக விளங்கக்கூடிய பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டிக்கும் விதமாக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



    தென்காசி மாவட்டம் நகர புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர் பழனி தலைமையில் இரு சக்கர வாகனத்தை பாடை கட்டி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டையூர் பகுதியில் பெட்ரோல் பங்க் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம் நடத்தினர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Congress, Petrol Diesel Price, Tenkasi

    அடுத்த செய்தி