வரலாறு காணாத பெட்ரோல் விலையேற்றம்... சைக்கிள் வியாபாரம் மீண்டும் அதிகரிப்பு

சைக்கிள்

ஒரு மாதத்திற்கு 100 சைக்கிள்கள் விற்பனையான நிலை மாறி, தற்போது 300 சைக்கிள்கள் விற்பனையாகிறது.

 • Share this:
  வரலாறு காணாத பெட்ரோல் விலையேற்றத்தால், திண்டுக்கல்லில் சைக்கிள் வியாபாரம் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளது.

  பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து 100 தாண்டியுள்ளது. இதனால் சிக்கன நடவடிக்கையாக, திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் சைக்கிள் பயணங்களில் மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

  இருசக்கர வாகன பெருக்கம், மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம் போன்ற காரணங்களால், கடந்த 10 ஆண்டுகளாக அழிவின் விளிம்பில் இருந்ததாக கூறும் சைக்கிள் வியாபாரிகள், தற்போது பெட்ரோல் விலை சதமடித்ததால் தங்களது வாழ்வின் சிரமங்கள் நீங்கியதாக கூறுகின்றனர்.

  Also Read : தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி

  இவை தவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடல்நலத்தை பேணிக் காக்க சைக்கிளிங் செய்வதாலும் சைக்கிள் விற்பனை அதிகரித்ததாக தெரிவிக்கின்றனர்.  ஒரு மாதத்திற்கு 100 சைக்கிள்கள் விற்பனையான நிலை மாறி, தற்போது 300 சைக்கிள்கள் விற்பனையாகும் நிலையில், வியாபாரிகள் மட்டுமின்றி சைக்கிள் பழுதுபார்க்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் ஓரளவு மேம்பட்டுள்ளது. சதமடித்த பெட்ரோல் விலை ஒருபுறம் சுமையை ஏற்படுத்தினாலும், அழிவின் முனையில் இருந்த சைக்கிள் விற்பனைத் தொழில் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையை சீர்தூக்கியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: