தமிழகத்தில் 21 மாவட்டங்களில்  100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை

மாதிரி படம்

அனைத்துப் பொருள்களின் ஏற்றுமதி இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் பெட்ரோல் டீசல் விலையும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.

  • Share this:
நாடு முழுவதும் தொடர்ந்து பெட்ரோலின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக டெல்லி மும்பை போன்ற மாநிலங்களில் பெட்ரோலின் விலை நூறு ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே வேளையில் தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பாக கடலூர் மற்றும் மலை பகுதிகளில் நூறு ரூபாய் என்ற வீதத்தில் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டத்தில் முதல்முறையாக 100 ரூபாய் என்ற விலை எட்டியுள்ளது

தொடர்ந்து பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதற்கு எதிர்மாறாக தொடர்ந்து பெட்ரோல் விலையை கட்டுக்கடங்காமல் உயர்த்தி வருகின்றனர்.

Also Read : நீட் தேர்வுக்கு மாணவர்கள் கட்டாயம் தயாராக வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஏதோ பெட்ரோல் விலை மட்டும்தான் உயர்வது என்று பொருள் அல்ல... பெட்ரோல் விலை ஏற்றத்தால் ஒட்டுமொத்த அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது

அனைத்துப் பொருள்களின் ஏற்றுமதி இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் பெட்ரோல் டீசல் விலையும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலை குறைந்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும் என்ற நிலை இருப்பதால் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள வாக்குறுதிப்படி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். மேலும் மத்திய அரசு விரைவில் ஜிஎஸ்டி க்குள் பெட்ரோல் விலை நிர்ணயத்தை கொண்டு வரவேண்டும் என்பதையும் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 21 மாவட்டங்களில்  100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை

1.கடலூர்
2.தர்மபுரி
3.திண்டுக்கல்
4.கள்ளக்குறிச்சி
5.கிருஷ்ணகிரி
6.நாகப்பட்டினம்
7.நீலகிரி
8.ராமநாதபுரம்
9.திருப்பத்தூர்
10.திருவண்ணாமலை
11.வேலூர்
12.விழுப்புரம்
13.சேலம்
14.கன்னியாகுமரி
15.சிவகங்கை
16.தேனி
17.தஞ்சாவூர்
18.திருவாரூர்
19.தென்காசி
20.செங்கல்பட்டு
21. அரியலூர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: