தமிழகத்தில் 21 மாவட்டங்களில் சென்சூரி அடித்த பெட்ரோல் விலை! - கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக ரூ.101.50-க்கு விற்பனை

பெட்ரோல் பங்க்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெட்ரோல் லிட்டருக்கு  ரூ. 101. 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  31 மாவட்டங்களில் பெட்ரோலின் விலை 100 ரூபாயை தாண்டியது.

  • Share this:
இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோலின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக டெல்லி மும்பை போன்ற மாநிலங்களில் பெட்ரோலின் விலை நூறு ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது

தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பாக கடலூர் மற்றும் மலைப்பகுதிகளில் நூறு ரூபாய் என்ற வீதத்தில் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டத்தில் முதல்முறையாக 100 ரூபாய் என்ற விலை எட்டியுள்ளது.

Also Read: காதல் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் வளைகாப்பு நடத்திய கணவர்... நெல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெட்ரோல் லிட்டருக்கு  ரூ. 101. 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  31 மாவட்டங்களில் பெட்ரோலின் விலை 100 ரூபாயை தாண்டியது.

1கடலூர் 2தர்மபுரி 3திண்டுக்கல் 4கள்ளக்குறிச்சி 5கிருஷ்ணகிரி6நாகப்பட்டினம் 7நீலகிரி 8ராமநாதபுரம் 9திருப்பத்தூர் 10திருவண்ணாமலை 11 வேலூர் 12 விழுப்புரம் 13சேலம் 14கன்னியாகுமரி 15சிவகங்கை 16தேனி 17தஞ்சாவூர் 18திருவாரூர்19 தென்காசி20 செங்கல்பட்டு21கோவை22 ஈரோடு23 மதுரை 24பெரம்பலூர் 25புதுக்கோட்டை 26ராணிப்பேட்டை 27தென்காசி 28 திருச்சி29திருப்பூர் 30தூத்துக்குடி 31விருதுநகர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதற்கு எதிர்மாறாக தொடர்ந்து பெட்ரோல் விலையை கட்டுக்கடங்காமல் உயர்த்தி வருகின்றனர். ஏதோ பெட்ரோல் விலை மட்டும்தான் உயர்வது என்று பொருள் அல்ல. பெட்ரோல் விலை ஏற்றத்தால் ஒட்டுமொத்த அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

Also Read: MSDhoni : என்ன தல நீங்களே இப்படி பண்ணலாமா? -விமர்சனத்துக்குள்ளான தோனியின் புகைப்படம்

அனைத்துப் பொருள்களின் ஏற்றுமதி இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் பெட்ரோல் டீசல் விலையும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலை குறைந்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும் என்ற நிலை இருப்பதால் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள வாக்குறுதிப்படி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் மேலும் மத்திய அரசு விரைவில் ஜிஎஸ்டி க்குள் பெட்ரோல் விலை நிர்ணயத்தை கொண்டு வரவேண்டும் என்பதையும் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: