• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் குறைவு... மற்ற மாவட்டங்களின் நிலை?

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் குறைவு... மற்ற மாவட்டங்களின் நிலை?

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்ட நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது மாநிலத்தில் உள்ள உழைக்கும் வர்க்கத்திற்கும், நடுத்தர குடும்பங்களுக்கும் பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு1160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெட்ரோல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

    இதையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று வரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.55 காசுகள் விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.99.52 காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது.

    Also Read : உள்நாட்டு விமான கட்டணம் அதிகரிப்பு - பயணிகள் கவலை

    மற்ற மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையின் நிலவரம்

    ராணிப்பேட்டை - ரூ.100.55
    நாகப்பட்டினம் - ரூ.100.79
    கடலூர் - ரூ.101.38
    ஓசூர் - ரூ.101.31
    மயிலாடுதுறை - ரூ.103.94
    வேலூர் - ரூ.100.63
    தருமபுரி - ரூ100.63
    கன்னியாகுமரி - ரூ.100.64
    கிருஷ்ணகிரி - ரூ.101
    சேலம் - ரூ 100.25
    தென்காசி - ரூ.100.16
    புதுக்கோட்டை - ரூ.100.70

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: