Petrol Diesel Price: தமிழ்நாட்டின் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.. வாகன ஓட்டிகள் ஷாக்!

பெட்ரோல் நிலையம் (மாதிரி படம்)

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்துள்ளது. இதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்பட்டுள்ள மதிப்பு கூடுதல் வரிக்கு ஏற்ப, ஒவ்வொரு மாநிலத்திலும் விலை மாற்றம் நிலவுகிறது.

  • Share this:
    தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதன்படி, கடந்த ஜுன் மாதத்தில் இதுவரை 12 முறை விலை அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் இன்று  பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 101.06 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 94.06 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

    இதனிடையே மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக ஒவ்வொறு மாநிலங்களிலும் பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது. இதன் காரணமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமல்லாது தென் மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே பெட்ரோலின் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது.

    தற்போது, தமிழ்நாட்டிலும் பெட்ரோலின் விலை 35 மாவட்டங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 07, 2021 )

    அதேபோல மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 106.25 ஆகவும், டீசல் விலை ரூ 97.09 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விற்பனைக்கு ரூ 100.21 ஆகவும், டீசல் ரூ 89.53 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
    கொல்கத்தாவில், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 100.23 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 92.50 ஆகவும் விற்கப்படுகிறது.




























    நகரம் பெட்ரோல் டீசல்
    டெல்லி 100.21 89.53
    மும்பை 106.25 97.09
    சென்னை 101.06 94.06
    கொல்கத்தா 100.23 92.50

     
    Published by:Vaijayanthi S
    First published: