பெட்ரோல் செலவு மிச்சம்.. குதிரை வண்டி ,சைக்கிளுக்கு மாறிய வாகன ஓட்டிகள்

Youtube Video

 அக்கம் பக்கம் செல்லக் கூட பைக்கை உதைத்த நிலை மாறி, தூரமான இடங்களுக்கு கூட சைக்கிளை மிதிக்க ஆரம்பித்துவிட்டதாக கூறுகிறார்கள் வாகன ஓட்டிகள்.

 • Share this:
  தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது.ஆல் இன் ஆல் அழகுராஜாவான கவுண்டமணி இப்படி சவடாலாக சொன்னதைத்தான், புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இந்த சைக்கிள் பழுது பார்க்கும் மணிவாகசமும் தற்போது கூறிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் கொத்தமங்கலத்தில் பைக்குகளை உரும விட்டபடி பந்தாவாக வலம் வந்த பலரும் இப்போது அண்ணன் மணிவாசகத்திடம்தான் சரண் அடைந்திருக்கின்றனர்.

  பெட்ரோல் விலை சதம் அடித்துவிட்டு சிக்சர் விளாசிக் கொண்டிருப்பதால் மணி பர்ஸ் இளைத்துக் கொண்டே போக வேறு வழியின்றி சைக்கிளுக்கு மாற முடிவு செய்துவிட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டில் பயன்படுத்திய சைக்கிளை பழைய இரும்புக்கு போடலாமா என யோசித்து மூலையில் போட்டு வைத்திருந்தவர்கள், அதை தூசு தட்டி மணிவாசகத்திடம் கொடுக்கிறார்கள்.. பெட்டிக் கடை நடத்திக் கொண்டிருந்த இந்த முன்னாள் சைக்கிள் மெக்கானிக், தற்போது ஆல் இன் ஆல் அழகுராஜாவாக கொத்தமங்கலத்தில் பிஸியாக இருக்கிறார்.

  அக்கம் பக்கம் செல்லக் கூட பைக்கை உதைத்த நிலை மாறி, தூரமான இடங்களுக்கு கூட சைக்கிளை மிதிக்க ஆரம்பித்துவிட்டதாக கூறுகிறார்கள் வாகன ஓட்டிகள்.

  அறந்தாங்கிப் பக்கம் குதிரை வண்டி பந்தயங்கள் பிரபலம்.. தற்போது பந்தய காலம் இல்லை என்ற நிலையிலும், நான்கு பேர் பந்தாவாக பேராவூரணியில் இருந்து அறந்தாங்கிக்கு குதிரையில் பயணித்தார்கள்.

  அதற்கு காரணமும் பெட்ரோல் விலைதான்..நான்கு பேரும் இரு பைக்குகளில் அறந்தாங்கிக்கு சென்றால் பெட்ரோல் செலவு கட்டுபடியாகாது என்பதால் வீட்டில் சும்மா நின்ற குதிரை வண்டியில் அறந்தாங்கிக்கு வந்ததாக கூறுகிறார்கள் இவர்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் போக்குவரத்து என ஆயிரம்தான் பாராட்டினாலும் கட்டுக்கடங்காத பெட்ரோல், டீசல் விலையை நினைத்து இவர்கள் கண்ணீர் விடுவதை மறைக்க முடியாது..
  Published by:Sankaravadivoo G
  First published: