Home /News /tamil-nadu /

பெட்ரோல் விலை தமிழகத்தில் ரூ.107ஐ கடந்தது: டீசல் விலையும் அதிகரிப்பு!

பெட்ரோல் விலை தமிழகத்தில் ரூ.107ஐ கடந்தது: டீசல் விலையும் அதிகரிப்பு!

பெட்ரோல்-டீசல் விலை

பெட்ரோல்-டீசல் விலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 106 ரூபாய் 97 காசுக்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் 36 காசுகள் விலை உயர்ந்து 107 ரூபாய் 33 காசாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் உயர்ந்து103 ரூபாய் 59 காசுக்கு விற்பனை ஆகிறது.

    பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை தொடர்ந்து 5வது நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.107ஐ கடந்துள்ளது. டீசல் விலையும் ரூ.104ஐ நெருங்கியுள்ளது.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின்படி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

    கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.120ஐ கடந்துள்ளது. இன்றும் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில்  ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசுகள் உயர்ந்து 106.35 ரூபாய்க்கும்  ஒரு லிட்டர் டீசல் 34 காசுகள் உயர்ந்து  102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 106 ரூபாய் 97 காசுக்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் 36 காசுகள் விலை உயர்ந்து 107 ரூபாய் 33 காசாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு லிட்டர் டீசல் 103. 20 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 39 காசுகள் உயர்ந்து 103. ரூபாய் 59 காசு என விற்பனை செய்யப்படுகிறது.

    இதையும் படிங்க: கன மழையால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விமுமுறை

    Published by:Murugesh M
    First published:

    Tags: Fuel Price hike, Petrol Diesel Price, Tamilnadu

    அடுத்த செய்தி