தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை... ஒரு வாரத்தில் ரூ.1.46 அதிகரிப்பு

news18
Updated: September 21, 2019, 7:12 AM IST
தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை... ஒரு வாரத்தில் ரூ.1.46 அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் விலை
news18
Updated: September 21, 2019, 7:12 AM IST
சவுதி அராம்கோ நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்த நிலையில், தற்போது அதன் விலை குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

செப்டம்பர் 14-ம் தேதி சவுதி அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் வயல் மற்றும் சுத்திகரிப்பு நிலைங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். கச்சா எண்ணெய்யை பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று இந்திய அரசு கூறினாலும், செப்டம்பர் 14-ம் தேதி முதல் பெட்ரோல் , டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் செப்டம்பர் 14-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 74 ரூபாய் 78 காசுகளாக இருந்தது. இது தொடர்ந்து அதிகரித்து செப்டம்பர் 17-ம் தேதி 74 ரூபாய் 99 காசுகளாக உயர்ந்தது. இந்நிலையில், இன்று 76 ரூபாய் 24 காசுகள் என்ற நிலையில் இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய் 97 காசுகள் அதிகரித்துள்ளது.


அதேபோல் செப்டம்பர் 14-ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 69 ரூபாய் 09 காசுகளாக இருந்தது. இது தொடர்ந்து அதிகரித்து செப்டம்பர் 17-ம் தேதி 69 ரூபாய் 31 காசுகளாக உயர்ந்தது. இன்று 70 ரூபாய் 33 காசுகள் என்ற நிலையில் இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 1 ரூபாய் 69 காசுகள் அதிகரித்துள்ளது.

சவுதி அராம்கோ மீது நடத்தப்பட்ட தாக்குதலால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரே நாளில் 20 சதவிதம் வரை அதிகரித்தது. அதாவது செப்டம்பர் 13-ம் தேதி 60 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை, செப்டம்பர் 17-ம் தேதி 68 டாலராக அதிகரித்தது. இந்நிலையில், செப்டம்பர் 19-ம் தேதியே கச்சா எண்ணெய்யின் விலை 64 டாலராக குறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலை சற்று சீறடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெட்ரோல், டீசல் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also watch

Loading...

First published: September 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...