TN Budget 2021| பெட்ரோல் மீதான வரியை ₹3 அளவு குறைக்கிறது அரசு

தமிழக பட்ஜெட் அறிவிப்பு

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். 

  • Share this:
    தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.  2021 - 2022ஆம் ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவைதான் எளிய உழைக்கும் வர்க்கம் அதிகமாகப் பயன்படுத்தும் போக்குவரத்து முறை. இவர்கள் பெட்ரோல் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

    Also Read:  குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000: ரேஷன் அட்டையில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை - நிதியமைச்சர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்து, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காமல் பெருமளவில் பயன் பெற்றதால் பெட்ரோல் விலை உயர்விற்கு மத்திய அரசேதான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஏற்கெனவே எனது  உரையில் சுட்டிக்காட்டியுள்ளேன். இருப்பினும் தமிழ்நாடு முதலமைச்சர்  பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவிற்கு குறைக்க ஆணையிட்டுள்ளார்.” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: