Petrol Diesel Price : தமிழகத்தில் உச்சத்தைத் தொட்ட பெட்ரோல், டீசல் விலை: கடலூரில் அதிகபட்சமாக பெட்ரோல் 99.2 ரூபாய்- விரைவில் சதம் தொடும்

பெட்ரோல் நிலையம்(மாதிரி படம்)

தமிழகத்தில் ஓரிரு தினங்களில் பெட்ரோலின் விலை 100 ரூபாயைக் கடக்கும் சூழல் உள்ளது.

  • Share this:
தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, கடந்த மே மாதத்தில் மட்டும் 19 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக ஒவ்வொறு மாநிலங்களிலும் பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது. இதன் காரணமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமல்லாது தென் மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே பெட்ரோலின் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது. தற்போது, தமிழ்நாட்டிலும் பெட்ரோலின் விலை 100 ரூபாயை நெருங்கி வருகிறது. தற்போதைய விலையேற்றம் தொடர்ந்தால் தமிழகத்திலும் ஓரிரு நாளில் பெட்ரோலின் விலை 100 ரூபாயைக் கடந்துவிடும்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்று 96.94 ரூபாய் இருந்த பெட்ரோலின் விலை இன்று 25 காசுகள் உயர்ந்து 97.19 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. அதேபோல, நேற்று 91.15 ரூபாய் இருந்த டீசலின் விலை 27 காசுகள் உயர்ந்து 91.42 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் பெட்ரோலின் விலை கடந்த 10 தினங்களில் 1.70 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

கடந்த 10 தினங்களில் 6 முறை பெட்ரோலின் விலை உயர்ந்துள்ளது. இத்தகைய விலை உயர்வால் தற்போது பெட்ரோல் விலை 97.19 ரூபாயை எட்டியுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சற்று ஏற்ற இறக்கமாக இருந்துவருகிறது. அதிகபட்சமாக கடலூரில் 99.20 ரூபாய் விலையை எட்டியுள்ளது. நீலகிரியில் 99.17 ரூபாயும், திருவண்ணாமலையில் 99.03 ரூபாயாகவும் இருந்துவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல டீசலின் விலை 91.15 ரூபாயிலிருந்து 27 காசுகள் உயர்ந்து 91.42 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 10 தினங்களில் 6 முறை டீசல் விலை உயர்ந்துள்ளது. அந்த விலை உயர்வின் காரணமாக 89.65 ரூபாயிலிருந்து 91.42 ரூபாயை எட்டியுள்ளது. சுமார் 2 ரூபாய் டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று டீசல் விலை கடலூரில் அதிகபட்சமாக 93.35 ரூபாயாகவும், நீலகிரியில் 93.26 ரூபாயாகவும், திருவண்ணாமலையில் 93.19 ரூபாயாகவும் இருந்துவருகிறது.
Published by:Karthick S
First published: