Petrol-Diesel Price | 10-வது நாளாக மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை - சென்னை நிலவரம் என்ன?

Petrol-Diesel Price | 10-வது நாளாக மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை - சென்னை நிலவரம் என்ன?

பெட்ரோல் நிலையம்(மாதிரி படம்)

பெட்ரோல், டீசல் விலை 10-வது நாளாக மாற்றமில்லாமல் தொடர்கிறது.

  • Share this:
    கொரோனா நெருக்கடிக்கு பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் மீட்சி பாதைக்கு திரும்பி வருவதால் பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஜூன் மாதம் முதலிலிருந்து உயரத் தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை சமீபத்தில் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றன.
    பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

    இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் உள்ளது. இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 91.34 ரூபாயாகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 84.80 ரூபாயகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    புதுடெல்லி பெட்ரோல் விலை இன்று 91.17 ரூபாயாகவும் டீசல் விலை 81.47 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா பெட்ரோல் விலை இன்று 87.24 ரூபாயாகவும் டீசல் விலை 80.21 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: