முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 100 நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல்.. இன்றைய (ஆகஸ்ட் 29, 2022) விலை நிலவரம்

100 நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல்.. இன்றைய (ஆகஸ்ட் 29, 2022) விலை நிலவரம்

பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்

சென்னையில் கடந்த 100 நாள்களாக  பெட்ரோல் டீசல் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை ஆகிறது.

  • Last Updated :
  • Chennai, India

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல்,  டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல்  விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 100  நாள்களாக  சென்னையில்  பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இதே விலைக்கு விற்பனை ஆகிறது.

முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது, எனவே எரிபொருள் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.9.50, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.7குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21ஆம் தேதி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைந்த நிலையில், அன்று தொடங்கி இன்று வரை  100 நாள்கள் சென்னையில் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் செய்யாமல் இதே விலைக்கு விற்கப்படுகிறது.

First published:

Tags: Chennai, Petrol Diesel Price