• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை - 10 நாட்களில் ரூ.5 வரை அதிகரிப்பு

உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை - 10 நாட்களில் ரூ.5 வரை அதிகரிப்பு

டீசல் விலை 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.77.21 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

டீசல் விலை 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.77.21 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாட்களில் ரூ.5 வரை அதிகரித்துள்ளதற்கு 300% வரி விதிப்பே காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 10வது நாளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் 80 ரூபாயைத் தாண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தன. மே மாதத்தில் சர்வதேச அளவில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கேற்ப மத்திய அரசின் கலால் வரி உயர்வு, மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி அதிகரிப்பு போன்றவற்றால் ஜூன் 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க ஆரம்பித்தது.

    சென்னையில் ஜூன் 7ம் தேதி 76 ரூபாய் 07 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை கடந்த 10 நாட்களில் 4 ரூபாய் 83 காசுகள் அதிகரித்து 80 ரூபாய் 37 காசுகளாக உள்ளது. இதே போல, கடந்த 7ம் தேதி 68 ரூபாய் 74 காசுகளாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை 4 ரூபாய் 95 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 17 காசுகளாகவும் உள்ளது.

    Also see:

    இதன் மூலம் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்த போது விற்கப்பட்டதை விட, தற்போது பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை சந்தித்துள்ளன. இதற்கு பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் 300 சதவீத வரியே காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது ஏற்புடையதல்ல என வாகன ஓட்டிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் எனக் கூறும் பொருளாதார நிபுணர்கள், வரியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    Also read: ஊரடங்கு விவகாரத்தில் முதலமைச்சர் முன்னுக்குப்பின் முரணாக பேசவில்லை - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ விளக்கம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: