சைக்கிளில் வந்த தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.. சென்னையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  அருகே போராட்டத்தில் ஈடுபட்டார்.

  • Share this:
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். 

போராட்டத்தின் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக போராட்டம் நடைபெறும் பகுதிக்கு முன்பாக 500மீட்டர் இடைவெளியில் சைக்கிளில் மூலம் பயணம் மேற்கொண்டு போராட்டம் நடைபெறும் மேடைக்கு வந்தனர்.

பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வைகட்டுப்படுத்தாமல் உள்ள மத்திய, மாநில அரசுக்கு எதிராக  தே.மு.தி.க சார்பில் தமிழத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என  கடந்த 30ம் தேதி அறிவித்தனர். அதன்படி இன்று பல்வேறு மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போராட்டத்தின் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக போராட்டம் நடைபெறும் பகுதிக்கு முன்பாக 500மீட்டர் இடைவெளியில் சைக்கிளில் மூலம் பயணம் மேற்கொண்டு போராட்டம் நடைபெறும் மேடைக்கு வந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னதாக சைக்கிள் பயணம் போக கூடாது இது கொரோனோ காணலாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்த நிலையில் அதையும் மீறி சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். தற்போது பெட்ரோல் விலையை கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் மேடையில் கண்டனம் தெரிவித்து வருகிறார்.


உடனடி செய்திளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: