தமிழக அரசியலில் பாஜக பங்கு முக்கியமானது; பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை பாஜக வெற்றியைப் பாதிக்காது: எல்.முருகன்

தமிழக அரசியலில் பாஜக பங்கு முக்கியமானது; பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை பாஜக வெற்றியைப் பாதிக்காது: எல்.முருகன்

எல்.முருகன்

பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன்.

    பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதனைத்தொடர்ந்து சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவை நாடு முழுதும் மோடி ஆட்சி மீது கடும் விமர்சனங்களை எழுப்பி வரும் நிலையில் இதனானெல்லாம் ஒரு பாதிப்பும் இருக்காது என்ற தொனியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன் கூறியதாவது:

    தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் அதிமுக-பாஜக இடையே எந்த இழுபறியும் கிடையாது. 2 நாளில் இறுதியாகும். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.

    அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறோம். கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அதிமுகதான் முடிவெடுக்கும்.

    அமமுகவை அதிமுகவுடன் இணைப்பது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் தான் முடிவு செய்வார்கள். சட்டமன்றத்திற்கு இரட்டை இலக்கத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் செல்வார்கள். தமிழக அரசியலில் பாஜகவின் பங்கு முக்கியமானது, என்று தெரிவித்தார்.
    Published by:Muthukumar
    First published: