ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது - மத்திய இணை அமைச்சர் வர்மா

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது - மத்திய இணை அமைச்சர் வர்மா

மத்திய இணை அமைச்சர் வர்மா

மத்திய இணை அமைச்சர் வர்மா

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்' - மத்திய இணை அமைச்சர் வர்மா

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார். 

  இது குறித்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  மத்திய சிறு குறு தொழில்துறை இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கின்றது, இதர பிற்படுத்த பட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களின் இலக்கை மாநில அரசு செய்து வருவதாகவும்,  மேலும் இது குறித்து கண்காணிப்பு குழுவிடம் மாவட்ட ஆட்சியர்  கோரிக்கை வைக்கையில்,  மத்திய அரசு செய்து தர தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

  பாஜக நிர்வாகிகள் சொத்துக்கள் மீது தாக்குதல்  நடைபெறுவது குறித்து கேள்விக்கு  தமிழக அரசிடம் இது குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

  மேலும் இந்திய நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு முகமை உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது எனவும் இது  தமிழகத்தில் மட்டும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் 30% பங்களிப்பை வழங்குகின்றன. மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கின்றது. இதர பிற்படுத்த பட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களின் இலக்கை மாநில அரசு செய்து வருகின்றது. மத்திய அரசு 89 தொழில் குழுமங்களை உருவாக்கி உள்ளது அவற்றில் 27 தொழில் குழுமங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

  செய்தியாளர் பொ. வீரக்குமரன்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: BJP, DMK, Petrol, RSS