திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு... பாமகவுக்கு தொடர்பு உள்ளதாக புகார்...!

திமுக-வை சேர்ந்த பரமசிவம் வீட்டை  அந்த தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் பார்வையிட்டு போலீசாரிடம் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: April 12, 2019, 12:39 PM IST
திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு... பாமகவுக்கு தொடர்பு உள்ளதாக புகார்...!
பெட்ரோல் குண்டு
Web Desk | news18
Updated: April 12, 2019, 12:39 PM IST
சென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில், பாமகவுக்கும் தொடர்பு இருப்பதாக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் அமமுக-வினரின் கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்திய திமுகவினருக்கும் அமமுக-வினருக்கும் இடையே தகராறு நடைபெற்றதாக தெரிகிறது.

இந்நிலையில், அண்ணாநகர் திமுக பகுதி செயலாளர் பரமசிவம் என்பவரது வீட்டில் அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரமசிவத்தின் கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.


உடனே தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் பரமசிவத்தின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர், பரமசிவம் வீட்டை  அந்த தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் பார்வையிட்டார். அவரும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... எந்த காலத்திலும் பா.ஜ.கவிற்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் ஸ்டாலின்

Loading...



Also see...  இறுதி கட்டத்தில் தமிழக தேர்தல் களம்... காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வருகை


Also see... 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...