ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள்... 17 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள்... 17 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

தமிழக அரசு

தமிழக அரசு

காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், உள்துறைச் செயலாளர் பணிந்தரரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு 17 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

  கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில், பாஜக அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடு, கார் மற்றும் கடைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும், தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு 17 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தினார். காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், உள்துறைச் செயலாளர் பணிந்தரரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  ALSO READ | ''மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் நல்லெண்ணம் கொண்டவர்'' முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

  பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். அப்போது, சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

  கோவையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக தவறான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். இதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க, அனைத்து மத தலைவர்களையும் அழைத்து ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Petrol