ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

டிஜிபி சைலேந்திர பாபு

டிஜிபி சைலேந்திர பாபு

Petrol Bomb Attacks on RSS BJP Functionaries : மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யட்டுள்ளதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வீடுகளில் மண்ணெண்ணெய் குண்டு வீசுவது போன்ற பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

  நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

  அதைத்தொடர்ந்து கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்பினரின் வீடுகள் மீது கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் குண்டு, மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் வீச்சு தொடர்பாக குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

  அதன்படி இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், நூறு நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யட்டுள்ளதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

  கோயம்புத்தூர் மாநகரில் சிஆர்பிஎப் படைப்பிரிவின் அதிரடிப்படையினர், மாநில கமாண்டோ படையினர் என கூடுதலாக 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற குற்றசெயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: BJP, Sylendra Babu