Home /News /tamil-nadu /

பெட்ரோல், டீசல்: சென்னையில் 60 ஆவது நாளாக ஒரேவிலை!

பெட்ரோல், டீசல்: சென்னையில் 60 ஆவது நாளாக ஒரேவிலை!

பெட்ரோல்

பெட்ரோல்

Petrol, Diesel Price Today | சென்னையில் 60ஆவது நாளாக இன்றும் (January 3-2022) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரேவிலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    கச்சா எண்ணெய் விலைக்கேற்ப சர்வதேச அளவில், எரிபொருள் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், கடந்த 59 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    அந்த வகையில், 60ஆவது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முதலில் திமுக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    Read More : தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 1,600-ஐ நெருங்கியுள்ளது

    தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜவுளித்துறையில் 5 சதவீதமாக உள்ள வரியை 12 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுத்த போதிலும் தமிழக பா.ஜ.க வேண்டுகோளின்படி அந்த வரி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

    Must Read : தமிழக சட்டமன்ற கூட்டம் - எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை

    மேலும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் திமுக எம்.பி. மற்றும் மாநில நிதிஅமைச்சர் மத்தியிலேயே முரண்பாடு இருப்பதாக கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price

    அடுத்த செய்தி