• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்தது - இன்றைய (அக்டோபர் 29) நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்தது - இன்றைய (அக்டோபர் 29) நிலவரம்

பெட்ரோல்-டீசல் விலை

பெட்ரோல்-டீசல் விலை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து விற்பனையாகிறது.

  • Share this:
    சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து 105.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் டீசல் விலை இன்று 34 காசுகள் அதிகரித்து விற்பனையாகிறது.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின்படி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில், பெட்ரோல்-டீசலுக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய்க்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தேவை அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன, கணிசமான அளவுக்கு உற்பத்தியை பெரும்பாலான நாடுகள் அதிகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    பெட்ரோல், டீசல் மீது மத்திய-மாநில அரசுகள் அதிக அளவில் வரி விதித்துள்ளன. இதுவும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.105-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ கடந்து விற்பனையாகிறது.

    Must Read : தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்

    சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து 105 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று, டீசல் விலை நேற்று 33 காசுகள் உயர்ந்து, 101 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனையானது. இந்நிலையில், இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து 105.43 ரூபாய்க்கும், டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து 101.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: