• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெட்ரோல், டீசல் விலை : இன்றைய (நவம்பர் 5) நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை : இன்றைய (நவம்பர் 5) நிலவரம்

பெட்ரோல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை நிலவரம்

மத்திய அரசு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் கலால் வரியை குறித்து அறிவித்தது.

  • Share this:
    பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டது.

    மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் கலால் வரியை குறித்து அறிவித்தது. இதனால், அவற்றின் விலை குறைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல்விலையை குறைந்து அறிவித்தன.

    இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ. 12.85 காசுகள் குறைந்து ரூ.94.94 காசுக்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று, டீசல் விலை ரூ.19 குறைந்து ரூ.83.58 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    Must Read : தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

    இதனால், தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.6.46 காசும், டீசல் விலை ரூ.7.85 காசும் குறைவாக விற்பனை செய்யப்பட்டன இதனால், தமிழக எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் மற்றும் டீசல் போடுவதற்காக புதுச்சேரிக்கு சென்றனர்.

    புதுச்சேரியில் இன்று, ஒரு லிட்டர் பெட்ரோல் 94.94 ரூபாய்க்கும், டீசல் 83.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: