• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு : விலையை கட்டுக்குள் கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை

பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு : விலையை கட்டுக்குள் கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை

பெட்ரோல்

பெட்ரோல்

கடலூரில் பெட்ரோல் 103.01 ரூபாய்கும், டீசல் 98.55 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.

  • Share this:
    தமிழகத்தில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து உச்சம் அடைந்த நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 3  ரூபாய் குறைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் சட்டசபையில் ஆணை பிறப்பித்தார். அதன்பேரில் விலை உச்சம் அடைந்து காணப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் 102.89 ரூபாய்க்கு விற்பனையான நிலையிலிருந்து 3  ரூபாய் குறைந்து 99.89 ரூபாய்க்கு விற்பனையானது.

    இந்நிலையில், திண்டுக்கலில் பெட்ரோல் 99.89.பைசாவுக்கு விற்பனையான பெட்ரோல் இன்று, 101.95 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல 96.15 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் 1.30 ரூபாய் விலை உயர்ந்து 97.45 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

    இதேபோல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக இவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விலைவாசிகள் ஏற்றம் அடையவும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கவும் காரணமாக அமையும். இதனால் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மட்டுமே விலை உயர்வை கட்டுப்படுத்தி விலைவாசி ஏற்றத்தை தடுக்க முடியும் என பொது மக்கள் கூறுகின்றனர்.

    Must Read : இன்று சிக்குமா T-23 புலி? 14ஆவது நாளாக தொடரும் தேடுதல் பணி

    சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 26 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 60 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கன்னியாகுமரியில் இன்று பெட்ரோல் 102.18 ரூபாய்க்கும், டீசல் 97.78 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடலூரில் பெட்ரோல் விலை 103.01, டீசல் 98.55க்கு விற்கப்படுகிறது. தேனியில், பெட்ரோல் 101.90க்கும் டீசல் 97.51க்கும் விற்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: