Home /News /tamil-nadu /

பெட்ரோல், டீசல் : 62 நாட்களாக விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் : 62 நாட்களாக விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol, Diesel Price Today | சென்னையில் பெட்ரோல் விலை 62ஆவது நாளாக இன்றும் (ஜனவரி 5, 2022) மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு இருந்து வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

    மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது.































    நகரம் பெட்ரோல் டீசல்
    Delhi 95.41 86.67
    Mumbai 109.98 94.14
    Chennai 101.40 91.43
    Kolkata 104.67 89.79
    Source: Indian Oil

    சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 91.43 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 62ஆவது நாளாக விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

    Must Read : Chennai Power Cut |  சென்னையில் இன்று (05-01-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை

    பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்காது என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price

    அடுத்த செய்தி