Home /News /tamil-nadu /

இன்றைய (ஜனவரி 4, 2022) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

இன்றைய (ஜனவரி 4, 2022) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

பெட்ரோல்-டீசல்

பெட்ரோல்-டீசல்

Petrol, Diesel Price Today | சென்னையில் பெட்ரோல் விலை இரண்டு மாதங்களுக்கு மேலாக இன்றும், மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

    இந்நிலையில், மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது.

     































    நகரம் பெட்ரோல் டீசல்
    Delhi 95.41 86.67
    Mumbai 109.98 94.14
    Chennai 101.40 91.43
    Kolkata 104.67 89.79
    Source: Indian Oil

    சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 91.43 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி தொடர்ந்து 61 நாட்களாக விலையில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது.

    Must Read : ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு : மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

    இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்காது என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price

    அடுத்த செய்தி