Home /News /tamil-nadu /

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? இன்றைய (ஜனவரி 24, 2022) நிலவரம்

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? இன்றைய (ஜனவரி 24, 2022) நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol, Diesel Price Today | சென்னையில் பெட்ரோல் விலை 81ஆவது நாளாக இன்றும் (ஜனவரி 24, 2022) மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் விலையை, கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

    இதற்கிடையில், மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது.































    நகரம்பெட்ரோல்டீசல்
    Delhi95.4186.67
    Mumbai109.9894.14
    Chennai101.4091.43
    Kolkata104.6789.79
    Source: Indian Oil

    அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 91.43 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 81ஆவது நாளாக விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

    Read More : மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்கான இன்றைய (ஜனவரி 24) ராசிபலன்

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருவருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்காது என்பதால் மக்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்துள்ளனர்.

    Must Read : திருடனாக மாறிய முன்னாள் போலீஸ்.. ஓடும் ரயிலில் தொடர் திருட்டு

    இந்நிலையில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price

    அடுத்த செய்தி