தினந்தோறும் எரிபொருட்களின் விலையை கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது.
நகரம் |
பெட்ரோல் |
டீசல் |
Delhi |
95.41 |
86.67 |
Mumbai |
109.98 |
94.14 |
Chennai |
101.40 |
91.43 |
Kolkata |
104.67 |
89.79 |
Source: Indian Oil |
அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 91.43 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 77ஆவது நாளாக விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருவருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்காது என்பதால் மக்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Must Read : கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
இந்நிலையில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், தற்போது மாற்றமடையாமல் உள்ள பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடகடவென உயரும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.