ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெட்ரோல், டீசல் : 70வது நாளாக இன்றும் விலையில் மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் : 70வது நாளாக இன்றும் விலையில் மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol, Diesel Price Today : சென்னையில் பெட்ரோல் விலை 70ஆவது நாளாக இன்றும் (ஜனவரி 13, 2022) மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாள்தோறும் எரிபொருட்களின் விலையை, கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது.

நகரம்பெட்ரோல்டீசல்
Delhi95.4186.67
Mumbai109.9894.14
Chennai101.4091.43
Kolkata104.6789.79
Source: Indian Oil

அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 91.43 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 70ஆவது நாளாக விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Must Read : Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 13, 2022)

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தொடங்கி போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருவருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்காது என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

First published:

Tags: Petrol, Petrol Diesel Price