இரண்டு மாதத்தில் பெட்ரோ கெமிக்கல் ஆலை பணிகள் : அமைச்சர் எம்.சி.சம்பத்

இரண்டு மாதத்தில் பெட்ரோ கெமிக்கல் ஆலை பணிகள் : அமைச்சர் எம்.சி.சம்பத்
  • Share this:
இன்று சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத் இன்னும்  இரண்டு மாதத்தில் பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைக்கும் பணிகள்  தொடங்கப்படும் என்று கூறினார்.

சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், தென் மாவட்டங்களில் எந்தவித தொழில் நிறுவனங்களும் தொடங்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,  தென்மாவட்டத்தில் தொழில்துறை சிறந்து விளங்கும் பகுதியாக மாற்றப்பட்டு வருவதாகவும், தூத்துக்குடியில் பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  இதற்காக 49000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.


பெட்ரோ கெமிக்கல் ஆலை துவக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இரண்டு மாதத்தில் பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading